ETV Bharat / city

வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குமா?

சென்னை: மத்திய அரசு அண்மையில் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தம் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் மூலம், விவசாய விளை பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

reforms
reforms
author img

By

Published : Jun 10, 2020, 8:30 PM IST

அத்தியாவசியப் பொருள்கள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கடந்த 3ஆம் தேதி அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதன்மூலம் இந்தப் பொருட்களை சேமித்து, ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

எதற்காக?

விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தேவைக்கு அதிகமாக விளைச்சல் இருந்தாலும், விவசாயிகள் இழப்பையே சந்திக்கின்றனர். போதிய சேமிப்புக் கிடங்கு வசதியின்மை, குளிர் பதன கிடங்குகள் இல்லாதது ஆகியவை மிகப் பெரிய சவால்களாக உள்ளன. அதேபோல், விளை பொருட்களை வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் அரும்பாடுபட்டு விளைவிக்கப்படும் பொருட்கள் யாருக்கும் உதவாமல் வீணாகிறது.

தற்போது, இந்த மாற்றங்களுக்குப் பிறகு தனியார் நிறுவனங்கள்/ அந்நிய நிறுவனங்கள் விவசாயத் துறையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளும்; உணவு விநியோக சந்தை நவீனமயமாக்கப்படும்; உடனடியாக கெட்டுப்போகும் வகை பொருட்களை காப்பாற்ற முடியும்; விவசாயிகளின் இழப்பை தடுக்க முடியும் என மத்திய அரசு கூறுகிறது.

மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை
மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை

உணவு பாதுகாப்பு

அத்தியாவசியப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் வகையில், போர், பஞ்சம், இயற்கை பேரிடர், மிகப்பெரும் விலை உயர்வு ஏற்படும் சூழல்களில், இந்தப் பொருட்களை கட்டுப்படுத்த திருத்தச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது. இது, விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் சீரான விலை கிடைக்க வழிவகை செய்யும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மாநில எல்லை கடந்து விற்பனை

வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் 2020க்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக மாநில அரசிடம் பதிவு செய்த வணிகர்களிடம் மட்டுமே வேளாண் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும், தங்களது பகுதியில் இருக்கும் ஏபிஎம்சி சந்தையிலேயே விளை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன.

விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் சீரான விலை கிடைக்க வழிவகை செய்யும் என அரசு நம்பிக்கை

தற்போது, விவசாயிகள் மாநிலங்களுக்கு இடையே சுதந்திரமாக தங்களது வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யலாம். விவசாயிகள் யாரிடம் தனது பொருட்களை விற்பனை செய்வது என தேர்ந்தெடுத்து, அதிக விலை கொடுப்பவர்களுக்கு விற்பனை செய்ய முடியும். இந்த நடவடிக்கையால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிபுணர்கள் கூறுவது என்ன?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சீர்திருத்தங்கள் 1991 பொருளாதார சீர்திருத்தங்களுக்கு நிகராகப் பார்க்கப்படுகிறது. இந்த சட்டத் திருத்தம் மூலம் விவசாயிகளே தங்களது உற்பத்திக்கான விலையை தீர்மானிக்கலாம் எனக் கூறுகிறார் பேராசிரியர் நாராயணமூர்த்தி. இவர், விவசாயிகளுக்கு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை தீர்மானிக்கும் வேளாண் விலை மற்றும் செலவு குழுவின் முன்னாள் உறுப்பினராவார்.

இடைத்தரகர்கள் விவசாயிகளை சுரண்டுவதை தடுக்கப்படும் - பேராசிரியர் நாராயணமூர்த்தி

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், " 1950களில் நாட்டில் உணவு தட்டுப்பாடு நிலவிய காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தற்போது பொருந்தாது. முன்பு 50 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது 300 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தால் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இந்த சட்டத்தால் விவசாயிகள், இடைத்தரகர்கள், நிறுவனங்கள் என யாராலும் விளை பொருட்களை சேமித்து வைக்க முடியாது. இதில் ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளதால் தனியார் துறை முதலீடு முற்றிலுமாக இல்லை. உணவு சேமிப்புக் கிடங்கு, குளிர் பதன கிடங்குகள் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் உணவுப் பொருட்கள் வீணாகி வருகிறது.

தற்போது, விவசாயிகள், நிறுவனங்கள் தானியங்களை தேவையான அளவு சேமிக்க, ஏற்றுமதி செய்ய முடியும். வணிகர்களிடம் விவசாயிகள் பேரம் பேச முடியும். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும். அதேபோல், வேளாண் பொருட்கள் சந்தை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதன் மூலம், இடைத்தரகர்கள் விவசாயிகளை சுரண்டுவதை தடுக்க முடியும். இத்தனை நாட்களாக விளையும் பொருட்களுக்கு விவசாயிகள் மிகக் குறைந்த தொகையையே பெற்று வந்தனர். 1 ரூபாய்க்கு ஒரு பொருள் விற்பனை செய்யப்பட்டால் அதில் வெறும் 25 விழுக்காடு மட்டும் உற்பத்தியாளருக்கு செல்கிறது. மீதமுள்ள தொகை வேறு யாருக்கோ செல்கிறது. தற்போதைய சீர்திருத்தங்கள் இதனை மாற்ற வல்லது. இது விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க உதவும்.

விவசாயிகள், இனி தங்களது பொருட்களுக்கான விலையை தீர்மானிக்க முடியும்

குத்தகை விவசாயத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களாலும் விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவர். சந்தையில் பண்டங்களுக்கான விலை குறைந்தாலும், நிறுவனங்கள் விவசாயிகளிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் விளை பொருட்களை வாங்க வேண்டியிருக்கும். இது விவசாயிகளுக்கு சாதகமாக அமையும். மொத்தத்தில், கேட்கும் விலைக்கு பொருட்களை விற்பனை செய்து வந்த விவசாயிகள், இனி தங்களது பொருட்களுக்கான விலையை தீர்மானிக்க முடியும் " என்று கூறினார்.

இதையும் படிங்க: சொட்டு நீர் பாசனத்திற்காக 478 கோடி ஒதுக்கீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.