சென்னை கலைவாணர் அரங்கத்தில் மூன்றாவது நாளாக சட்டப்பேரவை இன்று நடைபெற்றது. இதில், 110 விதியின்கீழ் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு தமிழ்நாட்டில் கடந்தாண்டு மார்ச் 25ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
நிவர், புரெவி புயல்களால் வேளாண் நிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் உழவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் உழவர்கள் வாங்கிய 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடிசெய்யப்படுகிறது. அதேபோல
கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது" என்று அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெற்ற 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் வேளையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி அறிவிப்புகள் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.