ETV Bharat / city

2021-22 ஆம் நிதியாண்டிற்கான பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு!

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட 2021-22 ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னையில் இன்று (ஜுன் 27) வெளியிட்டார்.

பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை
பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை
author img

By

Published : Jun 27, 2021, 8:56 PM IST

Updated : Jun 27, 2021, 10:12 PM IST

சென்னை: சென்னையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே. மணி, மூத்த நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 14 ஆண்டுகள்...

இதனை தொடர்ந்து பேசிய ராமதாஸ் "பாமக சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதி அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. நாங்கள் முன்வைத்த திட்டத்தை ஆண்டுக்கு ஒன்றாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருந்தாலும் வேளாண்மையில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்றிருக்கும்.

தமிழ்நாடு ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை வெளியாகும் என்று கூறியுள்ளது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும், இந்த ஆண்டின் சிறந்த தொடக்கமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது" என்றார்.

அறிக்கை குறித்து ராமதாஸ்

வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை குறித்து பேசிய ராமதாஸ், 'கோதாவரி - காவிரி திட்டம் நிறைவேறினால் நீர்வளம் பெருகி, இலக்கியங்களில் கூறப்பட்டவாறு காவிரியில் நீர் அதிகரிக்கும். காவிரி-சரபங்கா, மணிமுத்தாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு திட்டம் விரைவுபடுத்த வேண்டும். ஹைட்ரோ கார்பன் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும்.

வேளாண் துறை மூன்றாக பிரிக்கப்படும். சீமைக் கருவேல ஒழிப்பு, அதிசய மரம் என்று நான் கூறும் பனை மரத்தை பாதுகாக்க தனி சட்டம் வெளியிடப்படும்" என கூறிய ராமதாஸ், பாமகவின் அறிக்கையை கவனமாக பரிசீலித்து தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் தங்களின் எதிர்பார்ப்பாகும் எனவும் கூறினார்.

நாங்கள் திட்டம் வைத்துள்ளோம்

நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய ராமதாஸ், அன்புமணி

தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ்,"வேளாண் விளைப் பொருட்களை பாதுகாக்க குளிர் பதன கிடங்குகளை வட்டம் தோறும் அமைப்போம். நூறு ஐஏஎஸ், அரசு அலுவலர்கள் மூலம் ஆட்சியாளர்கள் தயாரிக்கும் அறிக்கையை பாமக தயாரித்துள்ளது. மேலும் 47, 750 கோடி ரூபாய் மதிப்பில் எங்களது இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னேற காரணம் நீர் பாசன திட்டம்தான். ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை நீர்பாசனத் திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும். வேளாண் துறை வளர்ச்சி மைனசில் உள்ளது. இதை 6 விழுக்காடாக மாற்ற திட்டம் வைத்துள்ளோம்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய அன்புமணி, "மது விலக்கு போராட்டத்தை பாமக பல ஆண்டுகளாக நடத்தி வந்த நிலையில், அனைத்து கட்சிகளும் இன்று அக்கோரிக்கையை ஏற்றுள்ளன. வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியது. இந்த அறிவிப்பு வெளிவர காரணமாக இருந்தவர் ராமதாஸ்" என தெரிவித்தார்.

அறிக்கையின் முக்கிய அம்சம்:

  • காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர் பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
  • கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் நெல் மூட்டைகளை சேமிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இனி மழையால் நெல் மூட்டைகள் சேதம் என்ற நிலை ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும்.
  • நான்கு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்படும். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட வேளாண் கல்லூரிகளுடன் இணைந்து, அப்பகுதிகளில் வேளாண்மை உற்பத்தி, உழவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண உதவும்
  • கிராமப்புற சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஆடுகள், கோழிகள், வான்கோழிகள், மீன்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும். பட்டதாரி இளைஞர் குழுக்கள் மூலம் முக்கிய நகரங்களிலும், சாலையோரங்களிலும் நவீன உணவகங்கள் அமைக்கப்பட்டு, சுயஉதவிக் குழுக்கள் வளர்க்கும் ஆடுகள், கோழிகள், மீன்கள் ஆகியவை சுவையாக சமைத்து வழங்கப்படும். இதனால், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
  • காலநிலைக்கு ஏற்ற திறன்மிகு வேளாண்மை முறையை செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்காக வேளாண்மை, சுற்றுச்சூழல், வருவாய், நிதி ஆகிய துறைகளின் செயலாளர்கள், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படும்.
  • ஊரக பொருளாதார மறுமலர்ச்சிக்கான மும்முனைத் திட்டம்: சிறப்பு வேளாண்-பொருளாதார மண்டலங்களை (Special Agro- Economic Zone) அமைத்தல், கைவினைஞர்களின் தொழிற்பட்டறைத் தொகுப்புகளை அமைத்தல், ஊரகத் தகவல் தொடர்பு முன்முயற்சிகள் ஆகியவையே வளர்ச்சிக்கான மும்முனை திட்டங்கள்

இதையும் படிங்க: அடுத்த பிரதமர் யார்? சுப்பிரமணியன் சுவாமி கேள்வி!

Last Updated : Jun 27, 2021, 10:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.