பெருநகரங்களில் கரோனா வைரஸ் அதிகம் பரவிவருவதால், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும், நாளை முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
இதனால், மருந்தகம், வங்கி உள்ளிட்ட சிலவற்றைத் தவிர, மளிகை, காய்கறிக் கடைகள் எதுவும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னையின் பல இடங்களில் காலை முதலே கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு மக்கள் பொருள்களை வாங்க குவிந்து வருகின்றனர். மளிகை, காய்கறி, பழக்கடைகளில் கூட்ட நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. சில இடங்களில் மீறப்பட்டாலும், பெரும்பாலும், பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.
தாம்பரம் காந்தி சாலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. முழு ஊரடங்கான நான்கு நாள்களுக்குத் தேவையான பொருள்களை, கடைகளில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் இன்று மட்டும் கடைகளை 3 மணிவரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!