ETV Bharat / city

20ம் தேதி பள்ளிகள் திறப்பா? விரைவில் அறிவிக்கிறார் முதலமைச்சர்!

சென்னை: பொங்கல் விடுமுறைக்கு பின் 20 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

author img

By

Published : Jan 11, 2021, 4:22 PM IST

reopen
reopen

கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில்10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பது குறித்து கடந்த நவம்பர் மாதம், பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் எனக் கருத்துத் தெரிவித்தனர்.

தற்போது கரோனா தொற்று குறைந்து வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து, பெற்றோரிடம் கடந்த ஜனவரி 6, 7 தேதிகளில் மீண்டும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொங்கல் முடிந்து வரும் 20 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்றாற்போல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக பொதுத்தேர்வு எழுதும் 10,12 ஆம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி தேர்ச்சி அளிக்கப்பட உள்ளதாகவும், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு அனுமதியுடன் தேர்ச்சி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வகுப்புகளை நடத்தவும் முடுவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அவர்களை பல பிரிவுகளாக பிரித்து, தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில் கற்பிக்கவும், ஆன்லைன் மூலம் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகங்கள் ஆன்லைன் மூலமே கற்பிக்கவும் அறிவுறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும், பள்ளிகளை திறக்க அரசு அனுமதித்தாலும், தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வமான இசைவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பெற்ற பின்னரே பள்ளியை திறக்க முடியும். பெற்றோரின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் தான் மாணவர்களை பள்ளிக்கு அழைக்க வேண்டும். அவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது.

மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளும் அறிவிக்கப்படவுள்ளன. இது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு மாநகரப் பேருந்துகள் இயக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.