புரெவி புயல் தாக்கத்தால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் கடந்த இரு நாட்களாக இடைவிடாமல் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருவதால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது.
கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முடிச்சூர், வரதராஜபுரம், ராயப்பன் நகர் வழியாக செல்லும் அடையாறு ஆற்றில் மேம்பாலத்தை தொட்டுக்கொண்டு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.
மேலும், தொடர்ந்து மழை பெய்தால் அப்பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து விடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேறுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராயப்பா நகர் அடையாறு ஆற்றுப்பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கனமழையால் டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து