சென்னை ராயபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர் கூறிகையில்,
அதிமுகவின் ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு போதிய கால அவகாசம் உள்ளது. விரைவில் அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஹைட்ரோ கார்பன் குறித்து முதலமைச்சர் தெளிவான அறிக்கை கொடுத்துள்ளார். மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதமுக அரசு செயல்படுத்தாது.
மேலும், பயம் உள்ளவன் தனியாக செல்லும் போது அந்த பயத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க கத்திக்கொண்டே செல்லுவான், அதுபோல டிடிவி தினகரன் தனிமரம் ஆகிவிட்டார், அது தோப்பாகாது. அவர் தனிமரம் மட்டுமல்ல எதற்கும் பயன்படாத கருவேலமரம் மரம் என்று டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்தார்.