இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான பழனிசாமி ஆகியோர் தலைமையில், சென்னையில் உள்ள கட்சியின் தலைமைக் கழகத்தில் இன்று (நவம்பர் 20) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, கட்சியின் வளர்ச்சிப் பணிகள், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது". இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.