ETV Bharat / city

2021 இல் மீண்டும் ஆட்சி - ஜெயலலிதா நினைவு நாளில் அதிமுக உறுதிமொழி! - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

memorial
memorial
author img

By

Published : Dec 5, 2020, 1:04 PM IST

Updated : Dec 5, 2020, 1:38 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உட்பட ஏராளமான அதிமுகவினர் அங்கு சென்று மலரஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், உறுதிமொழியை வாசித்தார். அதில், ஜனநாயகத்தின் பெயரில் ஒரு குடும்ப ஆட்சி நிலைபெற்றுவிட்டால், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல இயலாது என்றும், உண்மையான ஜனநாயகம் வேரூன்றவும், ஒரு குடும்பத்தின் ஏகபோக அரசியலும், ஆட்சியும் ஏற்படாத வண்ணம் மக்களாட்சியின் மாண்புகளை காப்போம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

குடும்ப ஆட்சி வராமல் தடுப்போம்! - அதிமுக உறுதிமொழி!

மேலும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஒன்றுபட்டு உழைத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுகவை மகத்தான வெற்றிபெறச் செய்வோம் என்றும் அதிமுகவினர் உறுதியேற்றனர். அதைத்தொடர்ந்து இரண்டு நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

முன்னதாக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தனது குடும்பத்துடன் வந்திருந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவுநாள்: ஓபிஎஸ், இபிஎஸ் ட்வீட்!

Last Updated : Dec 5, 2020, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.