ETV Bharat / city

’சமூக நீதி காத்த அறநிலையத்துறை அமைச்சர்’ - அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச் செல்வன் பாராட்டு - வைகைச் செல்வன்

சென்னை: அன்னதானம் குறித்து எடுத்துரைத்து பழங்குடியின பெண்ணுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர் சேகர் பாபுவுக்கு அதிமுக செய்தித்தொடர்பு செயலர் வைகைச் செல்வன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சேகர் பாபு
சேகர் பாபு
author img

By

Published : Oct 30, 2021, 2:22 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. அங்கு உணவருந்தச் சென்ற பழங்குடியினத்தவரை அவமதிப்பதாகவும், அனைவருடன் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கவில்லை என்றும் பழங்குடியின பெண் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்.

அந்தப் பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நேற்று (அக்.29) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அந்தக் கோயிலில் ஆய்வு செய்தார்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ட்வீட்

பின்னர் அங்கு நடைபெற்ற அன்னதானத்தில், அதே பழங்குடியினப் பெண் உள்ளிட்ட பொதுமக்களோடு அமர்ந்து அமைச்சர் சேகர்பாபு திருக்கோயில் அன்னதானம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து பழங்குடியின பெண்ணுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர் சேகர்பாபுவுக்கு சமூக வலைதள மக்கள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுக செய்தித்தொடர்பு செயலர் வைகைச் செல்வன் அமைச்சர் சேகர் பாபுவை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ”நரிக்குறவர்களுடன் உணவருந்தி சமூக நீதியைக் காத்த மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பாராட்டத்தக்கவர்” எனத் தெரிவித்துள்ளார்.

வைகைச் செல்வன் ட்வீட்
வைகைச் செல்வன் ட்வீட்

இதையும் படிங்க: அன்னதானம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது - பழங்குடியின பெண்ணின் குறைதீர்த்த அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.