ETV Bharat / city

வேலூர் தேர்தலில் எதிரொலித்த முத்தலாக், காஷ்மீர் பிரிப்பு...! அலசும் சிறு தொகுப்பு - காஷ்மீர் விவகாரம்

சென்னை: வேலூர் மக்களவைத் தேர்தலில் முத்தலாக், காஷ்மீர் பிரிப்பு விவகாரமும் எதிரொலித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது குறித்து அலசுகிறது இந்தத் தொகுப்பு.

கதிர் ஆனந்த் - ஏசி சண்முகம்
author img

By

Published : Aug 10, 2019, 1:35 AM IST

Updated : Aug 10, 2019, 1:41 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஐந்தாம் தேதி நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை நடந்த வாக்குப்பதிவு தினத்தன்று, காஷ்மீருக்கான சிறப்புத் தகுதிச் சட்டம் 370 நீக்கப்படுவதாக, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதனால் நாடெங்கும் பதற்றம் நிலவியது. பாஜக அரசின், இந்த அறிவிப்பை அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றன.

ஆனால் நாடெங்கிலும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள், இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின. காஷ்மீர் சிறப்புச் சட்ட நீக்கம், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான, வேலூர் தொகுதியிலும் எதிரொலித்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மதியம் வரை மந்தநிலை நீடித்தது. பிற்பகலில் வேகமெடுத்து ஒட்டுமொத்தமாக 72 விழுக்காடு வாக்குப் பதிவானது.

admk loss story  in vellore lok sabha election  அதிமுக தோல்விக்கு காஷ்மீர் விவகாரம் காரணமா  அலசும் சிறுதொகுப்பு  காஷ்மீர் விவகாரம்  திமுகவினரின் வெற்றிக் கொண்டாட்டம்
காஷ்மீர் விவகாரம்

ஏற்கனவே முத்தலாக் தடைச் சட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றியதால் பாஜக மீது இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர தெரிவித்தன. தற்போது காஷ்மீர் விவகாரமும் தொற்றிக்கொள்ளவே அதிமுக வேட்பாளர் ஏ. சி. சண்முகம் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். இதில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பெற்ற, நான்கு லட்சத்து 85 ஆயிரத்து 340 வாக்குகளை விட, எட்டாயிரத்து 141 வாக்குகள் குறைவாக (நான்கு லட்சத்து 77 ஆயிரத்து 199) பெற்று தோல்வியைத் தழுவினார்.

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பார்க்கும்போது வாணியம்பாடியில், 92 ஆயிரத்து 599 வாக்குகள் திமுகவுக்கும், 70 ஆயிரத்து 248 வாக்குகள் அதிமுகவுக்கும் விழுந்துள்ளன. இதில் திமுகவை விட 22 ஆயிரத்து 351 வாக்குகள் குறைவாக அதிமுக பெற்றுள்ளது. இதேபோல் ஆம்பூரில் 70 ஆயிரத்து 768 வாக்குகள் அதிமுகவும், 79 ஆயிரத்து 371 வாக்குகள் திமுகவும் பெற்றுள்ளன.

முன்னதாக, ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் தேர்தலில் திமுக 96 ஆயிரத்து 455 வாக்குகளும், அதிமுக 58 ஆயிரத்து 688 வாக்குகளும் பெற்றன. அப்போது, 37 ஆயிரத்து 767 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திமுக, தற்போது எட்டாயிரத்து 603 வாக்குகளே அதிகம் பெற்றுள்ளது. வேலூரில் 78 ஆயிரத்து 901 திமுகவும், அதிமுக 72 ஆயிரத்து 626 வாக்குகள் பெற்றுள்ளன.

முத்தலாக் விவகாரத்தில், மக்களவையில் அதிமுக ஆதரவு அளித்தாலும், மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும், வேலூர் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அதிமுக கணித்தது. அதனால்தான் பரப்புரைகளுக்கு பாஜகவைத் தவிர்த்து, மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்தது.

admk loss story  in vellore lok sabha election  அதிமுக தோல்விக்கு காஷ்மீர் விவகாரம் காரணமா  அலசும் சிறுதொகுப்பு
திமுகவினரின் வெற்றிக் கொண்டாட்டம்

பெரும்பான்மையான இஸ்லாமியர்களின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, பரப்புரையில் பாஜகவை களமிறக்காமல் அதிமுக தவிர்த்தாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

காஷ்மீர் சிறப்புச் சட்டம் ரத்து, முத்தலாக் விவகாரங்களால் பாஜக அரசின் மீது இஸ்லாமியர்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்ததாலே வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவியதாகக் கூறப்படுகிறது.

Intro:Body:சென்னை // வி. டி. விஜய் // சிறப்பு செய்தி

நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து விவகாரம், அதிக முஸ்லீம் வாக்காளர்களை கொண்டுள்ள வேலூரில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பறித்து விட்டது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த 5 ஆம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த தேர்தலுக்கும் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக என்றும், திமுக, காங்கிரஸ் என்றும் பழைய கூட்டணியிலேயே போட்டியிட்டன. இதில் அதிமுக சார்பில் ஏ. சி. சண்முகம், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும் களம் இறங்கினர்.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை வாக்கு பதிவு அன்று காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 நீக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இதனால் நாடெங்கும் ஒரு வித பதட்டம் தொற்றி கொண்டது. பாஜக அரசின் இந்த அறிவிப்பை அதிமுக வரவேற்றது. ஆனால் நாடெங்கிலும் உள்ள முஸ்லீம் அமைப்புகள் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆங்காங்கே போராட்டங்களும் நடந்தது. காஷ்மீர் சிறப்பு சட்ட நீக்கம் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியான வேலூர் தொகுதியிலும் எதிரொலித்தது. வாக்கு பதிவு தொடங்கியது முதல் மதியம் வரை மந்தநிலை நீடித்தது. பிற்பகலில் வேகமெடுத்து ஒட்டுமொத்தமாக 72 சதவீதம் வாக்கு பதிவானது.

ஏற்கனவே முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியதால் முஸ்லீம் அமைப்புகள் பாஜக மீது வெறுப்பில் இருந்தனர். அந்த வெறுப்பு பாஜக உடன் கூட்டணியில் உள்ள அதிமுக மீது அப்படியே திரும்பியது. தற்போது காஷ்மீர் விவகாரமும் தொற்றிகொள்ளவே அதிமுக வேட்பாளர் ஏ. சி. சண்முகம் தோல்வி அடைந்தார். இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பெற்ற 485340 வாக்குகளை விட 8141 வாக்குகள் குறைவாக (477199) பெற்று தோல்வியை தழுவினார். இதில் வாணியம்பாடியில் 92599 வாக்குகள் திமுகவுக்கும், 70248 வாக்குகள் அதிமுகவுக்கும் விழுந்துள்ளன. இதில் அதிமுக திமுகவை விட 22351 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது. இதேபோல் ஆம்பூரில் 70768 வாக்குகள் அதிமுகவும், 79371 வாக்குகள் என அதிமுகவை விட 8603 வாக்குகள் திமுக அதிகம் பெற்றுள்ளன. வேலூரில் 78901 திமுகவும், 72626 வாக்குகள் அதிமுகவும் பெற்றுள்ளன.

காஷ்மீர் விவகாரத்தில் அனைத்து முஸ்லிம்களும் ஒருசேர தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். அந்த எதிர்ப்பு வேலூர் தேர்தலையும் விட்டு வைக்கவில்லை. எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்த 'நீரும் நெருப்பும்' படத்தில் ஒரு எம்ஜிஆரை அடித்தால் மற்றொரு எம்ஜிஆருக்கும் வலிக்கும். அதை போலவே காஷ்மீரில் ஏற்பட்ட பிரச்சினை வேலூர் தேர்தலில் எதிரொலித்து பாஜக கூட்டணிக்கு பெருத்த அடியை வழங்கி உள்ளது.

முத்தலாக் விவகாரத்தில் மக்களவையில் அதிமுக ஆதரவு அளித்தாலும், மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் வேலூர் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அதிமுக பயந்தது. அதனால்தான் பிரச்சாரங்களுக்கு பாஜக தவிர்த்து மற்ற கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்தது. கூட்டணி தர்மத்துக்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூட ஏ. சி. சண்முகத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். வன்னியர் வாக்குகளை பெற பாமகவும் ஆதரவு கரம் நீட்டியது. ஆனால் பிரச்சாரத்துக்கு பாஜக தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. பாஜக கொடிகள் கூடதென்படவில்லை. எனவே பெரும்பான்மையான முஸ்லீம் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிமுக நேரடி பிரச்சாரத்தில் பாஜகவை களமிறக்கவில்லை. முதலியார் மற்றும் வன்னியர் சமூக மக்கள் அதிக அளவில் அந்த பகுதியில் அதிகம். வன்னியர் ஓட்டுக்களை கொண்ட பாமகவை கூட்டணியில் வைத்துக்கொண்ட அதிமுக, முதலியார் சமூகத்தை சார்ந்த ஏ. சி. சண்முகத்தை வேட்பாளராக்கி மெகா கூட்டணியாக களம் இறங்கியது. ஆனாலும் கூட காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, முத்தலாக் விவகாரங்களால் பாஜ அரசின் மீது முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி அதிமுகவை தோற்கடித்து திமுகவுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது.

Conclusion:
Last Updated : Aug 10, 2019, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.