சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் மதுரை பாலன். முன்னாள் அதிமுக வட்டச் செயலாளரான இவர், நேற்று கிண்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சோழிங்கநல்லூரில் உள்ள ராஜா கார்டனில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி, கோட்டாட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கச் சென்றதாகத் தெரிகிறது.
அப்போது, கோட்டாட்சியரை பார்வையிடும் நேரம் முடிவடைந்ததால் உதவியாளர் சுரேஷ்பாபு மதுரை பாலனை காத்திருக்குமாறு கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த பாலன் சுரேஷ்பாபுவைப் பிடித்து தள்ளிவிட்டுவிட்டு கோட்டாட்சியர் அறைக்குள் நுழைந்துள்ளார். அங்கே கோட்டாட்சியர் காயத்ரியைப் பார்த்து ஒருமையில் பேசியும், ’ சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று உடனே பார்வையிடாவிட்டால் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியாது, கோட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டி விடுவேன் ‘ என்றும் மிரட்டியுள்ளார்.
பின்னர், இந்நிகழ்வு குறித்து கோட்டாட்சியர் காயத்ரி, கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், மதுரை பாலன் மீது கிண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கணவரிடமிருந்து கொலை மிரட்டல்: சீரியல் நடிகை போலீஸில் புகார்