இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ அதிமுக மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் டிச.14ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற உள்ளது.
நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், கடந்த நவ.20ஆம் தேதி அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட ஆலோசனைகளின்படி, அதிமுக மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் 20% இட ஒதுக்கீடு - 8 மாதம் கழித்து ஒப்புதல் அளித்த ஆளுநர்!