ETV Bharat / city

கொங்கு மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் - சேலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்

கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாகக் கொங்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Additional covid-19 restrictions
Additional covid-19 restrictions
author img

By

Published : Aug 8, 2021, 12:45 PM IST

தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்கராணமாகவும், 3ஆம் அலையைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் மாவட்ட அளவிலான கட்டுப்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விதித்துவருகின்றனர். அதன்படி சேலம், ஈரோடு மாவட்டங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்ட கூடுதல் கட்டுப்பாடுகள்

  • மாநகர எல்லைக்குள் உள்ள வணிக வளாகங்கள், ஜவுளி நகைக்கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கு மாலை 6 மணி வரை மட்டும் அனுமதி. ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படு அனுமதியில்லை.
  • செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட், லீ பஜார், சின்னக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளின் கடைகளுக்கு 6 மாலை மணி மட்டுமே அனுமதி.
  • அனைத்துக்கடைகளிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்தத்தடை
  • ஏற்காடு செல்வோருக்கு இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி.
  • வார இறுதி நாள்களில் சுற்றுலாவிற்கு அனுமதி இல்லை.
  • நாளை முதல் இந்தக் கட்டுப்பாடுகள் அமல்.

ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள்

  • அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
  • தேநீர்க் கடைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி
  • கர்நாடக-தமிழ்நாடு சோதனைச் சாவடிகள் வழியாக ஈரோடு வருபவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்புவரை எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ், இரண்டு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழுடன் வருவது கட்டாயம்.
  • மருந்தகம், மளிகைக் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முற்றிலுமாக இயங்க தடை.
  • இந்தக் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்.

முன்னதாக கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

  • அத்தியாவசியக் கடைகளைத் தவிர்த்து இதர கடைகளுக்குக் காலை 10 முதல் மாலை 5 மணிவரை மட்டும் அனுமதி.
  • உணவகங்கள் காலை 8-5 மணிவரை 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி.
  • அனைத்து மார்க்கெட்களிலும் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி.
  • கேரளாவிலிருந்து கோவைக்குள் வருவோர் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்று வைத்திருக்க வேண்டும். அல்லது இரண்டு தவணை செலுத்திய தடுப்பூசி சான்றிதழ் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா...கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.