ETV Bharat / city

திறமைகளை ஊக்குவிக்கும் மஞ்சுமா மோகனின் 'ஒன் இன் எ மில்லியன்' - ஒன் இன் எ மில்லியன்

திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் விதமாக நடிகை மஞ்சுமா மோகன் 'ஒன் இன் எ மில்லியன்' என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளார்.

மஞ்சுமா மோகன்
மஞ்சுமா மோகன்
author img

By

Published : Jun 21, 2020, 2:27 AM IST

சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டுவரும் நடிகை மஞ்சிமா மோகன் ரசிகர்களிடம் மிக இயல்பாகவும் பழகிவருகிறார். தற்போது மஞ்சுமா மோகன் 'ஒன் இன் ஏ மில்லியன்' (பத்து லட்சத்தில் ஒருவர் - one in a million) இணையதளத்தைத் தொடங்கியுள்ளார்.

One in a million
One in a million
இதுகுறித்து அவர் கூறுகையில், ”நான் 'ஒன் இன் ஏ மில்லியன்' தளத்தை, மிகச்சிறந்த திறமைகளை ஊக்குவிக்கத்தான் ஆரம்பித்தேன். இந்தத் தளத்தை ஆரம்பிக்கும் முன்னர் நான் ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தேன்.
ஓவியரின் கைவண்ணம்
ஓவியரின் கைவண்ணம்
இதில் நடத்தப்படும் போட்டிகள் வழக்கமானதாக இருக்கக் கூடாது என்பதுதான் அது. அதற்குப் பதிலாக இந்தத் தளம் திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் குழுமமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இக்குழுமத்தில் திறமையாளர்கள் கைவினைப் பொருள்கள், நடனம், இசை, பாடல் என தங்கள் திறமைகளைப் பதிவேற்றி பாராட்டுக்களைப் பெறலாம்.
பென்சில் ஸ்கெட்ச்
பென்சில் ஸ்கெட்ச்
இது ஓர் நாள் இரவில் நடந்த மாற்றம் கிடையாது. எனது கல்லூரி நாள்கள் முதலாகவே இந்தத் தளம் பற்றிய எண்ணம் என் மனதில் இருந்தது. உலகமே நெகட்டிவாக இயங்கும் இந்தச் சூழலில் அனைவரிடத்திலும் பாசிட்டிவ் எண்ணத்தை வளர்க்க இந்த ஏற்பாடு மிகச்சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன். இயல்பு நிலை திரும்பிய பிறகும் இதனைத் தொடர்ந்து நடத்துவேன் 'ஒன் இன் எ மில்லியன்' தளத்தின் மிக முக்கியக் குறிக்கோள் வயது வரம்பின்றி அனைவரையும் பங்குகொள்ள வைப்பதே” என்றார்.
பென்சில் முனையில் சிற்பம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.