1961 நவம்பர் 19 அன்று அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மகனாக மதுரையில் பிறந்தார் நடிகர் விவேக். இவரது சொந்த ஊர் கோவில்பட்டி - இலுப்பையூரணி.
இவர் திரைத் துறையில் 1987ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விவேக் கடைசியாக 2020ஆம் ஆண்டு வெளிவந்த 'தாராள பிரபு' படத்தில் நடித்தார்.
புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
![நடிகர் விவேக்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11432713_rebf.jpg)
சின்னக் கலைவாணர்
தொடர்ந்து தனது படங்களின் மூலம் சமூக சிந்தனைகள், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்துவந்தார்.
மேலும் இவரது நகைச்சுவை கையூட்டு, மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றைத் தாக்குவதாக இருக்கும். இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும், ஜனங்களின் கலைஞன் என்றும் ரசிகர்கள் அழைக்கின்றனர்.
![வைகை மண்ணின் மைந்தனும்... அப்துல் கலாம் காதலனும்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11432713_jtes.jpg)
பசுமை கலாம்
அப்துல்கலாம் மீது உள்ள தீராத பற்று காரணமாக ஏராளமான மரக்கன்றுகளை நட்டுவந்தது மட்டுமல்லாமல் அனைவரும் மரம் நட வேண்டும் என்று வலியுறுத்தி அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்துவந்தார்.
இவரது சேவையைப் பாராட்டி 2009ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு முறை சிறந்த கலைச்சேவைக்காக மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
2015ஆம் ஆண்டு முனைவர் பட்டமும் பெற்றார். இவருக்கு அருள்செல்வி என்ற மனைவியும் அமிர்தநந்தினி என்ற மகளும் உள்ளனர்.
![வைகை மண்ணின் மைந்தனும்... அப்துல் கலாம் காதலனும்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11432713_vivek.jpg)
இதையும் படிங்க: காலமானார் ஜனங்களின் கலைஞன் விவேக்!