ETV Bharat / city

தயாரிப்பாளர் மீது நடிகர் விமல் புகார்!

author img

By

Published : Apr 20, 2022, 8:10 PM IST

போலி ஆவணங்கள் மூலம் தனது பட தயாரிப்பாளர்களை பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகர் விமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

நடிகர் விமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

நடிகர் விமல் 5 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் கோபி என்பவர் நேற்று(ஏப்ரல்.19) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். மன்னர் வகையறா படத்திற்காக பணம் வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்ய வைத்ததாகவும் தயாரிப்பாளர் கோபி தெரிவித்திருந்தார்.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகு பேச்சுவார்த்தையில் பணத்தை திருப்பித் தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், உரிய நேரத்தில் பணத்தை செலுத்தாமல் மோசடி செய்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இந்தப் புகாருக்கு விளக்கமளிக்கும் வகையில் நடிகர் விமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் கோபி கொடுத்த புகாரை விசாரிக்கும், அலுவலர் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மேலும் தன்னை மோசடி செய்வதாக சிங்காரவேலன் என்ற தயாரிப்பாளர் மீதும் புகார் அளித்துள்ளார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விமல், சிங்காரவேலன் என்ற தயாரிப்பாளர் தன் பெயர் மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி A3V என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி மோசடி செய்துள்ளதாகவும், மன்னர் வகையறா படத்திற்காக பணத்தை கடனாகப் பெற்று, படத்தை விற்பனை செய்து வரும் பணத்தையும் முறையாக கணக்கு காட்டாமல் சிங்காரவேலன் மற்றும் அவரது நண்பர்கள் மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் மீது நடிகர் விமல் புகார்

இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் சிங்காரவேலன், கோபி மற்றும் அவரது நண்பர்கள் தன்னிடம் எந்தவித பண பரிவர்த்தனையும் வைத்துக் கொள்ளவில்லை என்பது தொடர்பான ஆவணங்களையும் காவல்துறையினரிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

போலியான ஆவணங்களை வைத்திருந்த தயாரிப்பாளர்கள்

இந்த மன்னர் வகையறா பட விவகாரத்திற்கு பிறகு, கடந்த நான்கு வருடமாக சிங்காரவேலன், கோபி மற்றும் அவரது நண்பர்கள், போலியான ஆவணங்களை வைத்து, தான் நடித்த பட தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவரையும் அணுகி மிரட்டி உள்ளதாக நடிகர் விமல் குற்றம்சாட்டியுள்ளார். நிம்மதியாகத் தன்னை தூங்கவிடாமல் தயாரிப்பாளர் சிங்காரவேலன் மிரட்டி வந்ததாக தெரிவித்துள்ளார்.

படம் நடித்து வருவதால் இது தொடர்பாக வெளியில் தெரிவிக்காமல் தொடர்ந்து மிரட்டி வந்த சிங்காரவேலனுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தன்னிடம் கதை சொல்ல வரும் நபர்களிடம் லட்சக்கணக்கில் தன் பெயரை சொல்லி பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாக நடிகர் விமல் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் கதை சொல்ல வரும் போது ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்ததாகவும், இதனை அறிந்து அந்தப் பணத்தை தான் கொடுத்ததாகவும் நடிகர் விமல் தெரிவித்துள்ளார். தன் மீது எந்தவித குற்றமும் இல்லாத காரணத்தினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தற்போது காவல்துறையை நாடி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ஆவணங்களையும் கையெழுத்துகளையும் வைத்து A3v தயாரிப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டது மட்டுமே எனக்குத் தெரியும் எனவும், மற்றபடி தயாரிப்பாளர் சிங்காரவேலு மற்றும் அவரது நண்பர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தன்னை தொடர்ந்து மோசடி செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

இறுதியாக நடித்த விலங்கு என்ற வெப்சீரிஸ் தயாரிப்பாளரான எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனிடம் போலி ஆவணங்களை வைத்து சிங்காரவேலன் பணம் கேட்டு மிரட்டியதாக புதிய புகார் ஒன்றை கொடுத்ததாகவும், நடிகர் விமல் தெரிவித்துள்ளார். யார் மோசடி செய்து உள்ளார்கள் என்பது குறித்து இரு தரப்பு புகாரைப் பெற்றுக்கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Video: 'நான் பாஜக-வே கிடையாதுங்கோ..! : குமுறும் பாக்கியராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.