பிரபல பாலிவுட் நடிகரும், பிக்பாஸ் வெற்றியாளுருமான சித்தார்த் சுக்லா நேற்று(செப்.2) காலை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, நெட்டின் ஒருவர் தமிழ் நடிகர் சித்தார்த்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.
இதனைக் கண்ட சித்தார்த், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "என் மீது இணைய வழியாக வெறுப்பும், வன்முறையும் காட்டப்படுகிறது. இதில் எந்த விதத்தில் நாம் குறையப் போகிறோம்" எனத் குறிப்பிட்டுள்ளார்.
சித்தார்த் நடிப்பு தொழிலை மட்டுமின்றி அரசியலில் நிகழும் சூழல் குறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வருபவர். இதுபோன்ற பொய்யான தகவல்கள் அண்மைகாலமார அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.