தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தப் பின் செய்தியாளைகளைச் சந்தித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், “துணை முதலமைச்சரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். டி.என்.பி.எஸ்.சி. விவகாரத்தில் பூதாகரமான குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. தீர்வுக்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அரசு தரப்பில் உறுதியளித்துள்ளனர்.
5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, மாணவர்களின் திறனை அறிவதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவர்களை அறிவுச் சோதனைசெய்வதில் தவறில்லை. ஆகையால் சில மாற்றங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்“ என்றார்.
நடிகர் சங்கத் தேர்தல் ரத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர் சங்கத்திலிருந்து நான் மிகவும் தூரத்தில் உள்ளதாகவும், வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது, சினிமாவில்தான் நடிக்கத் தெரியும் என்றும் சரத்குமார் கூறினார்.
இதையும் படிங்க: குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு 42 பேர் மீது சிபிசிஐடியில் புகார்