ETV Bharat / city

கட்டட கான்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் நீதிமன்றத்தில் ஆஜர்! - santhanam

வளசரவாக்கத்தில் கட்டட கான்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கட்டிட கான்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் நீதிமன்றத்தில் ஆஜர்

author img

By

Published : Jul 1, 2022, 10:17 PM IST

சென்னை: தமிழ்த்திரைப்படங்களில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் பிரபல நடிகர் சந்தானம். வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம்(40), இவர் கட்டடங்களை கட்டி விற்பனை செய்யும் கான்டிராக்டராக தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவருடன் சேர்ந்து நடிகர் சந்தானம் குன்றத்தூர் அடுத்த கோவூர், மூன்றாம் கட்டளை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பெரிய அளவில் கட்டடம் கட்ட முடிவு செய்தார். இதற்காக சந்தானம் தனது பங்களிப்பாக ஒரு பெரிய தொகையை சண்முகசுந்தரத்திடம் கொடுத்து உள்ளார். ஆனால், சில காரணங்களால் ஒரு கட்டத்தில் அந்த கட்டடம் கட்டும் திட்டத்தை இருவரும் நிறுத்திவிட்டனர்.

இதையடுத்து சந்தானம் தான் கொடுத்த பணத்தை சண்முகசுந்தரத்திடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதில் குறிப்பிட்ட தொகையை சண்முகசுந்தரம், சந்தானத்திடம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மீதம் தர வேண்டிய தொகையை தருமாறு சந்தானம் கேட்டு வந்துள்ளார். அதற்கு சண்முகசுந்தரம் மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு சந்தானம் தனது மேனேஜர் ரமேஷ் உடன் வளசரவாக்கத்தில் உள்ள சண்முகசுந்தரம் அலுவலகத்திற்கு சென்று பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் கைகலப்பானது. இதில் சந்தானம் தாக்கியதில் சண்முகசுந்தரத்திற்கு லேசான காயமும், அவரது வக்கீல் பிரேம் ஆனத்திற்கும் காயமும் ஏற்பட்டது.

இருதரப்பினம் மாறி மாறி தாக்கிக்கொண்டதில் நடிகர் சந்தானத்திற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் மாறி, மாறி அளித்தப்புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நடிகர் சந்தானம் ஆஜராகாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இன்று(ஜூலை 1) பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸ்டாலின் முன்னிலையில் நடிகர் சந்தானம் ஆஜரானார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வரும் 15ஆம் தேதி இந்த வழக்கில் மீண்டும் சந்தானம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டதையடுத்து, நடிகர் சந்தானம் அங்கிருந்து கிளம்பிச்சென்றார்.

இதையும் படிங்க: Drop 'N' Draw Machine - பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் 'மாஸ்க்' தரும் இயந்திரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.