ETV Bharat / city

ஏ.சி. சண்முகத்துடன் ரஜினி திடீர் ஆலோசனை! - ரஜினிகாந்த்

சென்னை: போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.

rajini
rajini
author img

By

Published : Oct 26, 2020, 7:10 PM IST

Updated : Oct 26, 2020, 10:19 PM IST

ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவாரா, இல்லையா? என்ற பல ஆண்டு கேள்விக்கு, நிச்சயமாக கட்சி தொடங்குவேன் என அவரே தெரிவித்துவிட்டார். ஆனால், எப்போது என்ற கேள்விதான் இன்றும் பல்வேறு விவாதங்களை எழுப்பிவருகிறது. கடந்த 2ஆம் தேதி ரஜினியின் புதிய கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு எதையும் ரஜினி வெளியிடவில்லை.

இருப்பினும், அவரது ரசிகர்கள், ’இப்போ இல்லைன்னா எப்போவுமே இல்லை’ போன்ற வாசகங்களுடன் ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து ஆங்காங்கே சுவரொட்டிகளை ஒட்டிவருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் இன்று, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை நடத்தினார். சில மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் கட்சி தொடங்குவது பற்றி அவருடன் பேசப்பட்டதாகவும், நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

விஜயதசமி நாளான இன்றாவது புதிய கட்சியின் அறிவிப்பு வரும் என்று காத்திருந்த அவரது ரசிகர்கள் மத்தியில், ஏ.சி. சண்முகத்துடனான ரஜினியின் சந்திப்பு, மீண்டும் ஒரு ஏமாற்றத்தையே உண்டாக்கியுள்ளது.

'மாற்றத்திற்கு நாங்கள் தயார்' என ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த ஏ.சி. சண்முகத்தின் கல்வி நிறுவன விழாவில் பங்கேற்ற ரஜினி, கட்சி ஆரம்பித்து எம்ஜிஆர்-போல ஆட்சி தருவேன் என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சென்னை தேனாம்பேட்டையில் ரஜினி ரசிகர்கள் இன்று, ‘மாற்றத்திற்கு நாங்கள் தயார்’ என்ற வாசகங்களுடன் மீண்டும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: இட ஒதுக்கீடு விவகாரம்... பல குரலில் பேசும் பாஜக!

Last Updated : Oct 26, 2020, 10:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.