ETV Bharat / city

திரையுலகில் 45ஆவது ஆண்டு - காப்பக முதியவர்களுடன் கொண்டாடிய நடிகர் மோகன்! - film industry

திரையுலகில் 45ஆவது ஆண்டினை அடியெடுத்து வைக்கும் நடிகர் மோகன், கோடம்பாக்கத்தில் உள்ள காப்பக முதியவர்களுடன் தனது மகிழ்ச்சியைக் கொண்டாடினார்.

காப்பக முதியவர்களுடன் கொண்டாடிய நடிகர் மோகன்

author img

By

Published : Oct 7, 2022, 7:51 PM IST

தமிழ் சினிமாவில் சில்வர் ஜூப்ளி நாயகனாக வலம் வந்தவர், நடிகர் மோகன். இவரது படங்களில் பாடல்கள் எப்போதும் அருமையாக இருக்கும். இதனாலேயே இவரை மைக் மோகன் என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பர். கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த இவர், தற்போது ஹரா என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில்வர் ஜூப்ளி ஸ்டார் நடிகர் மோகன் தனது சினிமா பயணத்தின் 45ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அன்னை உள்ளம் முதியவர்கள் காப்பகத்தில், அன்னதானம் வழங்கினார்.

திரையுலகில் 45ஆவது ஆண்டு - காப்பக முதியவர்களுடன் கொண்டாடிய நடிகர் மோகன்!

இந்நிகழ்வினை அவரது ரசிகர் மன்றம் சார்பில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நடிகர் மோகன் ரீ என்ட்ரி ஆகும் ஹரா திரைப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி, இசையமைப்பாளர் லியாண்டர் மார்டி உள்ளிட்டோரும் இவ்விழாவினில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இணைய வாய்ப்பில்லை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.