ETV Bharat / city

கிடைக்குமா ஜாமீன்.. ஏக்கத்தில் நடிகை மீரா மிதுன்!

நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஏப்ரல் 1 தேதிக்கு தள்ளிவைத்து சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை மீரா மிதுன் ஜாமீன்
நடிகை மீரா மிதுன் ஜாமீன்
author img

By

Published : Mar 29, 2022, 8:02 PM IST

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நடிகை மீரா மிதுன் என்கிற தமிழ்செல்வி, உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையின் போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த 25ஆம் தேதி கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் ஏப்.4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனிடையே தமிழ்செல்வி என்ற மீரா மிதுன் தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு விசாரணை தள்ளிவைக்க வேண்டும் என கோரினார். இதனையடுத்து வழக்கை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: பெரிய நடிகர்களை நம்பி ஏமாற வேண்டாம் - பேரரசு அட்வைஸ்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.