ETV Bharat / city

நடிகர் சங்கத் தேர்தல் - தேர்தல் வேலைகளைத் தொடர உயர் நீதிமன்றம் அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் நடவடிக்கையை தொடரலாம், ஆனால் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை நீதிமன்ற உத்தரவின்றி வெளியிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

court
court
author img

By

Published : Feb 17, 2020, 3:36 PM IST

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2019 ஜூன் 23ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது எனவும், மறு தேர்தலை மூன்று மாதத்திற்குள் நடத்தி முடிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாசை நியமித்தும் உத்தரவிட்டிருந்த நீதிபதி, அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், தமிழகத்தில் பல்வேறு சங்கங்கள் பதவிக்காலம் முடிந்த பின்பும் பழைய நிர்வாகிகள் அதனை நிர்வகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இப்பிரச்சனையில், தமிழக அரசு ஒரு சார்பாக நடந்து கொண்டதாகவும், தனி நீதிபதி எந்த ஒரு சட்டரீதியான அம்சத்தையும் ஆராயாமல், தேர்தலை ரத்து செய்துள்ளதாகவும் விஷால் குறிப்பிட்டுள்ளார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், பதவிக் காலம் முடிந்த பின்பு முறையாக பொதுக்குழு கூட்டம் கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்புதான் புதிதாக தேர்தல் நடைபெற்றது என்றும், அதுவும் நீதிமன்ற உத்தரவுப்படி தான் நடைபெற்றது என்றும் வாதிட்டார். எனவே, தனி நீதிபதி உத்தரவு குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், தேர்தல் தொடர்பான நடவடிக்கையை தொடரலாம் என்ற நீதிபதிகள், அதேவேளையில், தேர்தல் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் உயர் நீதிமன்ற ஒப்புதலின்றி வெளியிடக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். வழக்கு விசாரணை அடுத்த வாரம் வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டு, அன்று மதியம் இந்த வழக்கில் மேல்முறையீடு தொடர்பான அனைத்து மனுக்களும் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கஞ்சாவின் உச்சம், வருமானவரித்துறை சோதனையின் இடைஞ்சல் - பாக்யராஜ் கலகல பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.