தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித், கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் நிதியுதவி வழங்கி இருந்தார். இந்நிலையில், நடிகர் அஜித் திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார். பெப்சி திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் அவர் வழங்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.