ETV Bharat / city

தேசிய பட்டியலின ஆணையத்தை கலைக்க மனு: ஆதாரங்களைத் தாக்கல்செய்ய உயர் நீதிமன்றம் ஆணை! - தேசிய பட்டியலின ஆணையம்

சென்னை: தேசிய பட்டியலின ஆணையத்தை கலைக்க உத்தரவிடக்கோரிய வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல என மத்திய அரசு தெரிவித்ததையடுத்து, கூடுதல் ஆவணங்களைத் தாக்கல்செய்ய மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt
author img

By

Published : Feb 3, 2020, 2:10 PM IST

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாகப் பட்டியலினத்தைச் சேராதவரும், பாஜகவைச் சேர்ந்தவரும் புகார் அளித்தால், உடனடியாக ஆணையம் செயல்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால், பரமக்குடியில் பட்டியலினத்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நிகழ்வு, கோவை மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பட்டியலின மக்கள் பலியானது உள்ளிட்ட பல விவகாரங்களில் தேசிய பட்டியலின ஆணையம் இதுவரை எந்த முக்கிய நடவடிக்கைகளையும் எடுக்காமல் முடங்கி இருப்பதால், தேசிய பட்டியலின ஆணையம் அந்த நோக்கத்திற்கு மாறாக, அரசியல் ஆதாய நோக்கத்தில் செயல்படுவதால் அதைக் கலைக்க உத்தரவிடக்கோரி, மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கம் சார்பில் அதன் தலைவர் செல்வகுமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, குடியரசுத் தலைவருக்கு மறைமுகமாக உத்தரவு பிறப்பிக்கும்வகையில் தாக்கல்செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், அரசியல் சாசன அமைப்பைக் கலைக்கக் கோரும் இந்த வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், எந்தச் சட்டப்பிரிவுகளின்கீழ் அரசியல் சாசன அமைப்பான ஆணையத்தை கலைக்க உத்தரவிட முடியும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பொதுவெளியில் இருக்கின்றன என்றனர். பின்னர், வழக்குக்கு ஆதரவாகக் கூடுதல் ஆதாரங்களைத் தாக்கல்செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: கேங்மேன் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு - விசாரணைக்கு உத்தரவு!

Intro:Body:தேசிய பட்டியலின ஆணையத்தை கலைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல என மத்திய அரசு தெரிவித்ததையடுத்து, கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக பட்டியலினத்தை சேராதவரும், பாஜக-வை சேர்ந்தவர் புகார் அளித்தால்,உடனடியாக ஆணையம் செயல்ப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால் பரமகுடியில் பட்டியலினத்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம், கோவை மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பட்டியலின மக்கள் பலியானது உள்ளிட்ட பல விவகாரங்களில் தேசிய பட்டியலின ஆணையம் இதுவரை எந்த முக்கிய நடவடிக்கைகளையும் எடுக்காமல் முடங்கி இருப்பதால் தேசிய பட்டியலின ஆணையம் அந்த நோக்கத்திற்கு மாறாக அரசியல் ஆதாயம் அடையும் நோக்கத்தில் ஆணையம் செயல்படுவதால் அதை கலைக்க உத்தரவிட கோரி மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கம் சார்பில் அதன் தலைவர் செல்வகுமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, குடியரசு தலைவருக்கு மறைமுகமாக உத்தரவு பிறப்பிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், அரசியல் சாசன அமைப்பை கலைக்க கோரும் இந்த வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், எந்த சட்டப்பிரிவுகளின் கீழ் அரசியல் சாசன அமைப்பான ஆணையத்தை கலைக்க உத்தரவிட முடியும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பொதுவெளியில் இருக்கின்றன என்றனர்.

பின்னர், வழக்குக்கு ஆதரவாக கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.