ETV Bharat / city

விலை குறைப்பு... விற்பனை அமோகம் - அமைச்சர் பூரிப்பு

தமிழ்நாட்டில் ஆவின் பால்விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், மூன்று மாதங்களில் 1.65 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், முன்னாள் அதிமுக அமைச்சர் அமெரிக்கா சென்று வந்ததற்கான விளம்பரத்திற்கு ரூ.88 கோடி செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆவின் பால் விற்பனை
ஆவின் பால் விற்பனை
author img

By

Published : Aug 12, 2021, 7:18 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, "ஆவின் பொருட்களை சர்வதேச அளவில் 8 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறோம்.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் போட இருக்கிறது. மாநில அளவில் தெலங்கானா, ஆந்திராவிற்கு ஆவின் உப பொருட்கள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல, ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், மூன்று மாதங்களில் 1.65 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது.

அதிமுக முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமெரிக்க சென்று வந்ததற்கான விளம்பரத்திற்கு மட்டும் ரூ.88 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பல கோடி ரூபாய் துறை ரீதியாக ஊழல் நடந்துள்ளது.

தற்போதுள்ள 23 பால்வள கூட்டுறவுத்துறை சங்கத்தில் 22 சங்கங்களும் பல்வேறு தரப்பில் தலைவர் உட்பட அனைவரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 8 சங்கங்களின் முறைகேடு தொடர்பான ஆவணங்கள் திரட்டப்பட்டு வருகிறது. அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.