திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இருந்தது. அதில் சேலம்-ஈரோடு ஒன்றியங்களின் சார்பாக தமிழக ஆவின் நிறுவனமும் கலந்து கொண்டது.
இந்த ஒப்பந்தப்புள்ளியில் நெய்யின் தரம், விலை ஆகியவற்றின் அடிப்படையில் ஆவின் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் லட்டு பிரசாதம் தயார் செய்வதற்காக ரூ.23 கோடி மதிப்பில் 7,24,000 கிலோ நெய் கொள்முதல் செய்ய தேர்வாகியுள்ளது.
இதன் மூலம் 15 வருடங்களுக்குப் பின் தற்போது ‘ஆவின்’ நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்க ஒப்புதல் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 2003-04ம் ஆண்டில் வழங்கி வந்தது கவனிக்கத்தக்கது.
வெளிநாட்டு வணிகத்தை அதிகரிக்கும் பொருட்டும், 6 மாதம் வரை கெடாத, உயர் வெப்பநிலையில் தயாரிக்கப்பட்ட பால் மற்றும் நெய், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.