சென்னை : ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் ஆடிமாதம் வரும் அமாவாசைக்குத் தனிச் சிறப்புள்ளது. இந்த நாளில் விரதமிருந்து முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தினால், அவர்களின் ஆசியையும், வாழ்வில் பல்வேறு சிறப்புகளைப் பெறலாம் என்பது மக்கள் நம்பிக்கை.
முன்னோர்கள் காலத்திலிருந்தே ஆடி அமாவாசை இது பின்பற்றப்பட்டுவருகிறது. இதனிடையே, ஆடி அமாவாசையில், ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து கோயில்களிலும், கடற்கரைகளிலும் புனித நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலில் மக்கல் அதிகளவில் கூட வாய்ப்பு உள்ளதால், தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதேபோல, நாகப்பட்டினம் மாவட்டத்தில் முக்கிய வழிபாட்டுத்தலங்களுக்கும், கடற்கரை பகுதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவிவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வார இறுதி தினங்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் 31ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு வழிபாடு நடத்தவும், அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 8 எப்படி இருக்கப்போகிறது?