ETV Bharat / city

கடன் கேட்டு மிரட்டியதால் தற்கொலை; ஒருவர் கைது - போலி ஆவணங்கள் தயாரித்து மிரட்டல்

சென்னை கொளத்தூரில் கந்து வட்டிக் கொடுமையினால், பாஸ்ட்புட் கடை நடத்தி வந்தவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஒருவரை போலீசார் செய்துள்ளனர்.

தற்கொலை
தற்கொலை
author img

By

Published : Jun 10, 2022, 9:08 AM IST

சென்னை கொளத்தூர் லட்சுமிநகர் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்தவர் சுதாகர்(44). இவர் சென்னை அண்ணாசாலையில் பாஸ்ட்புட் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி(42) என்ற மனைவியும், தீபக்(22), ஜோயல்(15) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சுதாகருக்கு செங்குன்றம் பகுதியில் சொந்த வீடு ஒன்று உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக அந்த வீட்டை விற்பனை செய்வதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால், மன உளைச்சல் அடைந்த சுதாகர் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கொளத்தூர் போலீசார் சுதாகர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இவரது மனைவி மகேஸ்வரி கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் தனது கணவர் சுதாகர் சிலரிடம் பணம் கடனாக பெற்றதாகவும், கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழலில் பணம் கொடுத்தவர் கந்து வட்டி கேட்டு கணவரை மிரட்டி வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். எனவே தன் கணவரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படும் பெரவள்ளூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் ராஜன்(50), கொளத்தூரை சேர்ந்த மைதிலி(54), பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் காமேஸ்வரன்(22), ரவி(54) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட சுதாகர் செங்குன்றத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டி வந்துள்ளார். வீடு கட்டும் பொறுப்பை ராஜனிடம் ஒப்படைத்து முன்பணமாக ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். அதன் படி, வீடு கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் வீடு கட்டுவதற்கான பாக்கி தொகையை சுதாகரால் கொடுக்கமுடியவில்லை. இதனால், ராஜன் அந்த இடத்தை தானே வாங்கி கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு சுதாகர் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, ரியல் எஸ்டேட் புரோகர் ராஜன் சுதாகருக்கு சொந்தமான இடத்தை தன்னுடைய இடம் என்றும் அந்த இடத்திற்கான ஆவணங்கள் தொலைந்து போய் விட்டதாகக் கூறி, செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்து சி.எஸ் ஆர் பெற்றுள்ளார். பின்னர், சுதாகர் இடத்தின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனை சமாளிக்க, சுதாகர் மைதிலி என்பவரிடம் 2 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.

பின்னர் குறிப்பிட்ட தேதியில் பணத்தை செலுத்த முடியாததால் மைதிலி சுதாகரிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன் அவர் அளித்த வெற்று காசோலையில் ரூ.10 லட்சம் தரவேண்டும் என்பது போல தயார் செய்து வங்கியில் செலுத்தி காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்தவுடன், சுதாகருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி மிரட்டியுள்ளார். ஒருபுறம் ராஜன் தொல்லை மற்றொருபுறம் மைதிலி மிரட்டல் இதனால் மனமுடைந்த சுதாகர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக, மைதிலி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் நிலம் பிரச்சனை, போலி ஆவணம் தொடர்பான விவகாரம் தொடர்பாக செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக பெண் சோப்தார் நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.