ETV Bharat / city

அப்துல் கலாம் உருவத்தை தையல் மிஷினால் வரைந்த பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம் - Abdul Kalam

அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவத்தை தையல் மிஷினால் பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

அப்துல் கலாம் உருவத்தை தையல் மிஷினாலேயே வரைந்து அசத்திய ஆசிரியர்

author img

By

Published : Jul 26, 2022, 7:45 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் மணலூர்பேட்டையை சேர்ந்த செல்வம். இவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு பிரஸ் பயன்படுத்தாமல் வெறும் "தையல் மிஷினாலேயே" அப்துல்கலாம் உருவத்தை வரைந்தார்.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றியவர். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அப்துல் கலாம் பெரும் தூண்டுகோளாக விளங்கியவர். விஞ்ஞானி முதல் குடியரசு தலைவர் வரை நாட்டின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணி இன்றியமையாது. 1998 ஆம் ஆண்டில் போக்ரான் அணுசக்தி சோதனையில் பங்கு வகித்ததன் மூலம் இந்தியாவின் "ஏவுகணை நாயகன்" பட்டத்தை பெற்றார்.

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு பிரஷுக்கு பதிலாக வெறும் "தையல் மிஷினாலேயே" நீர் வண்ணத்தில் தையல் மிஷினையை தொட்டு முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உருவத்தை 25 நிமிடங்களில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

பிரஷ் பயன்படுத்தாமலேயே வெறும் "தையல் மிஷினாலேயே" அப்துல்கலாம் உருவத்தை வரைந்த ஓவிய ஆசிரியர் செல்வத்திற்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கார்கில் வெற்றி தினம்; கவனம் ஈர்த்த மாணவர்களின் நாடகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.