ETV Bharat / city

கமலாலயம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு - a person throws petrol bomb at bjp chennai headquarters

சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமலாலயம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
கமலாலயம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
author img

By

Published : Feb 10, 2022, 9:02 AM IST

Updated : Feb 10, 2022, 10:38 AM IST

சென்னை: இன்று (பிப்ரவரி 10) அதிகாலை பாஜக அலுவலகத்திற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். தரையில் பட்டு பெட்ரோல் குண்டு வெடித்ததில் அங்கிருந்த கார்பெட் (தரைவிரிப்பான்) தீப்பிடித்து எரிந்தது. இதனால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

பின்னர், அங்குப் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் மாம்பலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், உயர் அலுவலர்கள் இது குறித்து விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒருவர் நடந்துவந்து பெட்ரோல் குண்டு வீசிச் சென்றது தெரியவந்தது. குண்டுவீச்சு தகவல் அறிந்து ஏராளமான பாஜக தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காட்சியளித்தது.

இதனைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டுவீசிய நபரை காவல் துறையினர் அடையாளம் கண்டு கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி வினோத் (38) என்பதும், குடிபோதையில் பெட்ரோல் குண்டுவீசியதும் தெரியவந்தது. நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலே அவர் பெட்ரோல் குண்டுவீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாஜக எப்படி மலரும்? டி. ராஜேந்தர்

Last Updated : Feb 10, 2022, 10:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.