ETV Bharat / city

டிப் டாப் உடை அணிந்து சைக்கிள் திருட்டு - சிசிடிவி காட்சி

author img

By

Published : May 16, 2022, 6:35 AM IST

சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் வாங்கிய விலை உயர்ந்த சைக்கிளை டிப் டாப் உடை அணிந்த மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

டிப் டாப் உடை அணிந்த மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் வினோத் குமார்(26). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை அதிகரித்து வந்ததால், புதியதாக 18,000 ரூபாய் மதிப்புள்ள சைக்கிள் வாங்கி அதில் வேலைக்கு சென்று வருகின்றார்.

இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு இரவில் சைக்கிளை வீட்டில் நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

டிப் டாப் உடை அணிந்து சைக்கிள் திருட்டு

அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது, அதில் டிப்டாப்பாக உடையணிந்திருந்த ஆசாமி ஒருவர் பட்டப்பகலில் எந்த அச்சமுமின்றி த சைக்கிளை எடுத்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

இதுதொடர்பாக குரோம்பேட்டையில் உள்ள குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வங்கியில் போலி நகை வைத்து ரூ.32 லட்சம் மோசடி: மூவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.