ETV Bharat / city

சென்னையில் நடுரோட்டில் ஒருவரை கத்தியால் தாக்கிவிட்டு தலைமறைவாகிய நபர் கைது! - குற்றவாளி

சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது நடுரோட்டில் வைத்து உடன் வந்தவரை கத்தியால் தாக்கிவிட்டு கடந்த 10 மாதமாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் நடுரோட்டில் ஒருவரை கத்தியால் தாக்கிவிட்டு தலைமறைவாகிய நபர் கைது!

author img

By

Published : Jul 15, 2022, 3:30 PM IST

சென்னை மடுவங்கரை பகுதியைச்சேர்ந்தவர் சுரேஷ் (37). கஞ்சா போதைக்கு அடிமையான சுரேஷுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு கஞ்சா அடிக்கும் இடத்தில் வைத்து வேளச்சேரியைச் சேர்ந்த பிரியாணி, நொட்டு விக்கி (எ) தமிழரசன் (27) ஆகிய இருவர் பழக்கமாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி கஞ்சா போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரியாணி என்பவரை சுரேஷ் தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரியாணி தனது நண்பனும் சுற்றுவட்டாரத்தில் ரவுடியாக வலம் வந்த நொட்டு விக்கியிடம் தன்னை சுரேஷ் தாக்கியதைக் கூறி தட்டிக்கேட்குமாறு முறையிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து பிரியாணியின், இருசக்கர வாகனத்தில் நொட்டு விக்கி மடுவாங்கரைக்குச்சென்று சுரேஷை அவரது வீட்டிலிருந்து, அதே இருசக்கர வாகனத்தில் நடுவில் அமரவைத்து அழைத்து வந்தனர்.

பின்னர் கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்தபோது பின்னால் அமர்ந்து வந்த நொட்டு விக்கி தான் மறைத்து வைத்திருந்த நீளமான கத்தியால் நடுவில் அமர்ந்திருந்த சுரேஷை சரமாரியாகத் தாக்கினார். இந்த திடீர் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக சுரேஷ் உயிர்தப்பித்து ஓடி பின் படுங்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் சுரேஷ் அன்றைய தினம் இரவு புகார் அளித்தார். புகாரின் பேரில் கிண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய நொட்டு விக்கி (எ) தமிழரசனை தேடியபோது தலைமறைவாகியது தெரியவந்தது.

நொட்டு விக்கி சுரேஷை பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து தாக்கும் பரபரப்பு சி.சி.டி.வி காட்சிகள்

இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நொட்டு விக்கியை, கிண்டி போலீசார் நேற்று இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நொட்டு விக்கி மீது வேளச்சேரி மற்றும் ஆதம்பாக்கம் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நொட்டு விக்கி சுரேஷை பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து தாக்கும் பரபரப்பு சி.சி.டி.வி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தூம் பட பாணியில் கொள்ளை: கர்நாடக மாநில கொள்ளையன் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.