சென்னை: விருகம்பாக்கம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் வடிவேலு (40). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி ராஜாமணி. இவர்களது மகள் ஜீவிதா (12).
கடந்த சில ஆண்டுகளாக வடிவேலு தெரிந்த நபர்களிடமிருந்து குறைந்த வட்டிக்கு கடனாகப் பணம் பெற்று, அந்தப் பணத்தை அதிக வட்டிக்கு பல பேரிடம் கொடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது.
கரோனா காரணமாக கடனாக கொடுத்த பணத்திற்கான வட்டி சரியான முறையில் வராததால், வடிவேலு பெற்ற கடனைச் செலுத்த முடியாமல் தவித்துவந்துள்ளார்.
மேலும் வடிவேலுவிடம் கடன் அளித்தோர் பணத்தைக் கேட்டுவந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வடிவேலு கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளார். தற்கொலை முயற்சி செய்வதற்கு முன்பாக, வடிவேலு தனது தங்கையிடம் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக காணொலி ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக வடிவேலுவின் தங்கை வீட்டிற்கு வந்து மூவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
சிகிச்சையளித்த மருத்துவர்கள் மூவரும் நலமாக இருப்பதாகத் தெரிவித்தனர். இந்தத் தற்கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: Suicide Prevention: அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுப்பது எப்படி?