மோடி - ஸ்டாலின் சந்திப்பு:
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரதமரைச் சந்திக்கிறார். இச்சந்திப்பின்போது செங்கல்பட்டு தடுப்பூசி மையத்திற்கு அனுமதி அளிப்பது, கரோனா சிறப்பு நிவாரண நிதிப் பங்கீடு, தடுப்பூசியை அதிக அளவில் ஒதுக்குவது உள்ளிட்ட தமிழ்நாட்டுப் பிரச்னைகள் குறித்து விரிவாகப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை:
தென்மேற்கு பருவகாற்று காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்ற மாவட்டங்களான திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் இன்று பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தளர்வுகள்:
கேரளாவில் இன்று முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகிறது. மதுக்கடைகள் திறக்கவும், தமிழ்நாடு எல்லை வரை பேருந்துகள் இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முக கவசம் அணிவது கட்டாயம் அல்ல:
பிரான்ஸில் இன்று முதல் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கோவிட் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாலும், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாலும் இந்த தளர்வை அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.
யூரோ கப்:
யூரோ கப்: இன்றைய ஆட்டத்தில் இந்திய நேரப்படி, இன்று மாலை 6:30 மணிக்கு உக்ரைன், வடக்கு மசிடோனியா அணிகள் மோதுகின்றன. இரவு 9:30 மணிக்கு டென்மார்க், பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.