புதுக்கோட்டை: Boy was died by shot in the head in Pudukkottai: நார்த்தாமலை அருகே மத்திய தொழிலகப் பாதுகாப்புப்படை வீரர்கள் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, வீட்டிற்குள் வெளியில் விளையாடிக்கொண்டிருந்த புகழேந்தி என்கிற 11 வயது சிறுவன் மீது தலையில் குண்டு பாய்ந்தது. பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மூளை நரம்பியல் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து 4 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து, தலையிலிருந்த குண்டு அகற்றப்பட்டது.
தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு
இதனையடுத்து சிறுவன் தொடர்ந்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று (ஜனவரி 3) மாலை 6.10 மணி நிலவரப்படி, சிறுவன் புகழேந்தி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் சிறுவனின் பெற்றோர், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் ரூ.10 லட்சம் நிவாரணம்
உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அத்துடன் சிறுவனின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு