சென்னை அடையார் மாளவியா 2 அவன்யூ தெருவில் அமைந்துள்ளது. அஷ்டலட்சுமி தனியார் குடியிருப்பில் தன் நண்பர்களுடன் வெளியூரில் இருந்து வந்து தாங்கி பணி புரிபவர் காவியா.
இவர் மாலை தனது வீட்டில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது காவியாவை அங்கு மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் கத்தியால் சராமரியாக குத்தினார்.
பின்பு அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்த மர்ம நபரைத் தடுக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து அந்த மர்ம நபர் பொதுமக்களை கற்களால் தாக்கி விட்டு தப்பி ஓடினார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அப்பெண்ணை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை மர்ம நபர் 15 இடங்களில் குத்தியுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அடையார் போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும், அந்த மர்ம நபருக்கும் ஏதாவது முன்விரோதம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கத்தியால் குத்தியது அப்பெண்ணின் காதலன் என்பது தெரியவந்துள்ளது.