சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக உள்ள பி.டீ ஆஷா, நிர்மல்குமார், சுப்பிரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன், புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க அனுமதியளித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டுள்ளது.
கொலிஜியம் என்பது நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்யும் முறையாகும். சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி உள்ளார்.