சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 84 பாதுகாப்பு படை வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் சிஆர்பிஎப் காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சூழலில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் 147 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் 84 காவலர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த உயிர் மயிருக்கு சமம்: முகநூல் நேரலையில் இளைஞர் தற்கொலை
நோய்த்தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஆளுநர் மாளிகையின் வெளிப்புறம், முதன்மை நுழைவாயில் ஆகிய இடங்களில் மட்டுமே பணிபுரிந்தவர்கள்.
இவர்கள் யாரும் ஆளுநர் அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் இருக்கும் முக்கிய கட்டடங்களில் பணி புரியவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஆளுநர் மாளிகையின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.