வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை(நவ.25) காலை கரையைக் கடக்கும் எனவும், அதி தீவிர புயலாக மாறக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக கடலோர மாவட்டங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
அதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி முழுவதும் 8 நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் பரவலாக கனமழை பெய்துவருவதால், மாநகராட்சி ஊழியர்கள் ஆதரவற்றோர், சாலையில் வசிப்போரை மீட்டு, நிவாரண முகாமில் தங்க வைத்து வருகின்றனர்.
அதன்படி காலையிலிருந்து தற்போது வரை 312 பேரை மீட்டு தங்க வைத்துள்ளனர். தங்க வைத்தவர்களில் 117 பேர் ஆண்களும், 130 பெண்களும், 65 குழந்தைகளும் அடங்கும். அவர்களுக்கு தேவையான உணவு, அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அதிகபட்சமாக சோளிங்கநல்லூர் நிவாரண முகாமில் 124 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நிவர் புயல்: முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி ஆலோசனை