ETV Bharat / city

விழுப்புரம் அருகே தீ விபத்து - 8 வீடுகள் சேதம்

விழுப்புரம் அருகே இருளர் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து சேதமானது.

author img

By

Published : Aug 9, 2022, 7:42 AM IST

தீக்கிரையான இருளர் குடிவாசிகளின் குடியிருப்பு

விழுப்புரம் : வளவனூர் அடுத்த இளங்காடு கிராமத்தில் இருளர் சமூக குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்பில் நேற்று சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அருகில் இருந்த 8 குடியிருப்புகளுக்கும் தீ பரவியது.

இந்நிலையில் தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினரால் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதில் 8 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமானது.

etv

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி ஸ்ரீ நாதா சம்பவ இடத்துக்கு நேரில் சென்றனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, வருவாய்த் துறை மூலம் அவர்களுக்கு உணவு, வேட்டி சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

மின்கசிவால் இருளர் குடி சமூகத்தை சேர்ந்த 8 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியது.

மேலும் வீட்டை இழந்த அனைவருக்கும் வீடு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தீ விபத்து குறித்து வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: உயர் கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி - வழிகாட்டுதல்கள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.