சென்னை: பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், 'அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 2020 - 21இல் வரும் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.419.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2020-21 கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் இருந்து 75 விழுக்காடு மட்டுமே வசூல் செய்ய வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்குரிய 75 விழுக்காடு கட்டணத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் வழங்க வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளார்.