ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,755ஆக உயர்ந்துள்ளது.

confirmed-coronavirus
confirmed-coronavirus
author img

By

Published : Apr 24, 2020, 7:15 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அதில், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 398 பேர் நேற்று (ஏப்ரல் 23) வரை வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பை 87 ஆயிரத்து 159 பேர் இன்று முடித்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 95 பேர் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.

தொற்று அதிகளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 19 பயணிகள், விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர். மேலும், விமான நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் தனி வார்டில் 846 பயணிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

coronavirus-infection
coronavirus-infection

72 ஆயிரத்து 403 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு பெறப்பட்டன. இவர்களில் 1,755 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 65 ஆயிரத்து 296 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆயிரத்து 483 பேரின் ரத்தம், சளி ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆறாயிரத்து 569 பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மேலும் 72 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 866 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் நேற்று வரை 1683 பேருக்கும், இன்று 72 பேருக்கும் என 1,755 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று வரை 20 பேர் உயிரிழந்தனர். இன்று 2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் இறப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான 3,371 வென்டிலேட்டர், 29,074 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.

மேலும் இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளில் சென்னை மாவட்டத்தில் 52 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏழு பேருக்கும், மதுரை மாவட்டத்தில் நான்கு பேருக்கும், ராமநாதபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தலா இருவருக்கும், காஞ்சிபுரம், சேலம், தென்காசி, திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 72 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள 37 மாவட்டங்களின் நிலவரம்:

coronavirus-infection
coronavirus-infection

மேலும் இன்று 114 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்தம் 866 பேர் குணமடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.