சென்னை: "அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது" என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், "முதலமைச்சர் பழனிசாமி, அச்சிறுமிக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.
கரோனா காலத்தில், தூத்துக்குடி சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஏழு வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள கொடூர சம்பவம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: மக்களிடம் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ளுங்கள் - ஏ.கே. விஸ்வநாதன் உருக்கம்