சென்னை: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், கோவிந்தராஜன், மணிவண்ணன், முகமது சௌகத் அலி, அருள் சாரங்கபாணி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பழகன் ஆகிய 7 பேர் சூடான் நாட்டிற்கு வேலைக்காக சென்றனர். ஆனால், அங்கு வேலை இழந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்துவந்தனர்.
இதனிடையே அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, அவர்களது குடும்பத்தினர் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு, இந்திய தூதர உதவியுடன் 7 பேரையும் மீட்டு சென்னை விமான நிலையம் கொண்டுவந்தது. அவர்களை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை துணை இயக்குநர் ரமேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் வரவேற்றனர். இதையடுத்து அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மேற்கு ஆப்பிரிக்காவில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்!