சென்னை: கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பெருமாள்-சந்தியா தம்பதியின் மகள் சஞ்சனா(10). இவர் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சல் வீராங்கனையான சஞ்சனா, சாதனை நிகழ்ச்சிக்காக நேற்று(ஏப். 25) விஜிபி கடற்கரையில் இருந்து காலை 6.30 மணிக்கு கடலில் நீந்தத் தொடங்கினார்.
25 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீந்தி கடந்து 11.30 மணியளவில் மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் கரை ஏறினார். இந்த தூரத்தை அவர் 4 மணி 48 நிமிடத்தில் நீந்தி கடந்துள்ளார். அவரது இந்த சாதனை இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
இளைஞர் நலத் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா ஐஏஎஸ் சால்வை அணிவித்து சிறுமி சஞ்சனாவை வரவேற்றார். பின்னர், மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில், பாராட்டு விழாவும் சாதனைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: 'மதுரை, சென்னையில் தட்ப வெப்பநிலையைத் தாங்கும் பசுமை கோயில்கள் - கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்'