இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அதில், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 358 பேர் நேற்று (ஏப்ரல் 25) வரை வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பை 87 ஆயிரத்து 159 பேர் இன்று முடித்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 362 பேர் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.
corona virus infected in tamilnadu தொற்று அதிகளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த பயணிகள், விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர். மேலும், விமான நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் தனி வார்டில் 838 பயணிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். 87 ஆயிரத்து 605 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு பெறப்பட்டன. இவர்களில் 1,885 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 77 ஆயிரத்து 133 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 568 பேரின் ரத்தம், சளி ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. எட்டாயிரத்து 19 பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மேலும் 64 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
corona virus infected in tamilnadu தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் நேற்று வரை 1,821 பேருக்கும், இன்று 64 பேருக்கும் என 1,885 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று வரை 23 பேர் உயிரிழந்தனர். இன்று ஒருவர் உயிரிழந்தனர். இதன்மூலம் இறப்பு எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. 838 நோயாளிகள் நல்ல நிலையில் உள்ளனர். இன்று 39 ஆண்களுக்கும் 25 பெண்களுக்கும் நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் மொத்தம் 1,279 ஆண்களும், 606 பெண்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான 3,371 வென்டிலேட்டர், 29,074 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளில் சென்னை மாவட்டத்தில் 28 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 15 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் ஏழு பேருக்கும், விழுப்புரம், நாமக்கல் மாவட்டங்களில் தலா 4 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு பேருக்கும், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 64 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள 37 மாவட்டங்களின் நிலவரம்:
corona virus infected in tamilnadu மேலும், இன்று 60 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் 1,020 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 12 வயதுக்குட்பட்ட 59 ஆண் குழந்தைகளும் 51 பெண் குழந்தைகளும் என 110 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.