ETV Bharat / city

சென்னை விமானநிலையத்தில் பயன்பாட்டுக்கு வரவிருந்த மல்டி லெவல் காா் பாா்க்கிங் திறப்பு தள்ளிபோக காரணம் என்ன?

author img

By

Published : Aug 1, 2022, 7:38 PM IST

சென்னை விமானநிலையத்தில் இன்று செயல்பாட்டிற்கு வரவிருந்த அதிநவீன 6 அடுக்கு மல்டி லெவல் காா் பாா்க்கிங் திறப்புவிழா தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் என்ன? என்று அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு....

சென்னை
சென்னை

சென்னை நீதிமன்ற வழக்கு, தீயணைப்புத்துறை வழங்கும் பாதுகாப்பிற்கான தடையில்லா சான்று கிடைக்காததால் சென்னை விமானநிலையத்தில் இன்று செயல்பாட்டிற்கு வரவிருந்த அதிநவீன 6 அடுக்கு, மல்டி லெவல் காா் பாா்க்கிங் செயல்பாட்டிற்கு வருவதில் திடீா் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 2ஆம் கட்ட நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் ரூ.250 கோடி செலவில், 2.5 லட்சம் சதுர அடி பரப்பில், 6 அடுக்கு மாடிகளுடன் கூடிய அதி நவீன மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பார்க்கிங் பணி கிட்டத்தட்ட இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நிறைவடைந்தன. எனவே, கடந்த ஜனவரி மாத கடைசியில் இருந்து, இன்னும் ஒரு மாதத்தில் புதிய நவீன கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வரும் என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்து இருந்தது.

கார் பார்க்கிங் வசதி: இந்த நிலையில் ஜூலை 9ஆம் தேதி இந்திய விமான நிலைய ஆணையம் ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டது. அதில், மல்டி லெவல் காா் பாா்க்கிங்கில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டன. இந்த அதிநவீன ஆறடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் ஆகஸ்ட் 1 முதல் (இன்று) பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை விமான நிலைய 2 ஆம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள்
சென்னை விமான நிலைய 2ஆம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள்
சென்னை விமானநிலையத்தில் கார் பார்க்கிங் வசதி

அதோடு இந்த கார் பார்க்கிங்கில், மின்சார வாகனங்களையும் நிறுத்தலாம்; அந்த மின்சார வாகனங்களுக்கு அங்கேயே மின்சாரம் சாா்ஜும் செய்துகொள்ளலாம். அதை இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொண்டு அதற்கான கட்டணத்தையும் செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தனர். இந்த அதிநவீன மல்டி லெவல் காா்பாா்க்கிங்கில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை நிறுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

தாமதத்திற்கு என்ன காரணம்? இந்த நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதியான இன்று சென்னை விமானநிலையத்தில் உள்ள அதிநவீன மல்டி லெவல் காா் பாா்க்கிங் செயல்பாட்டிற்கு வரவில்லை. இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது, 'சென்னை பன்னாட்டு விமானநிலையத்தில், 6 அடுக்கு கார் பார்க்கிங்கிற்கு, தீயணைப்புத்துறையிடம் இருந்து பாதுகாப்பு பற்றிய தடையில்லா சான்று பெற வேண்டும். அதற்கு விண்ணப்பித்து இருக்கிறோம். ஆனால், தீயணைப்புத்துறையிடம் இருந்து அதற்கான சான்று இன்னும் வரவில்லை.

எப்போது நடைமுறைக்கு வரும்: மேலும், ஏற்கெனவே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் 123 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால், தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங்கிற்கு, புதிய ஊழியர்களை நியமித்து கார் பார்க்கிங்கில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இதனால், ஏற்கெனவே பணியாற்றிய ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து உள்ளனர். அந்த வழக்கு விசாரணையில் இருப்பதால் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், புதிய ஊழியர்களை பணியமா்த்தி இந்த புதிய கார் பார்க்கிங்கை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, நீதிமன்ற வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்பு புதிய கார் பார்க்கிங் திறக்கப்படும் என்று தெரிகிறது' என்று கூறினார்.

புதிய கார் பார்க்கிங் வசதி தொடக்கமானது தள்ளிவைப்பு

அத்துடன், சென்னை விமானநிலையத்தில் ரூ.250 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் ஒரே நேரத்தில் 2000 வாகனங்களுக்கும் மேல் நிறுத்தக்கூடிய பார்க்கிங் செயல்பாட்டுக்கு வருவது மேலும் சில மாதங்கள், தாமதமாகலாம் எனவும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஆக.1 முதல் சென்னை விமான நிலையத்தில் 6 அடுக்கு கார் நிறுத்தம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.