இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழ்நாட்டில் 94 ஆயிரத்து 781 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு பெறப்பட்டன. இவர்களில் 1,937 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 83 ஆயிரத்து 21 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது . ஆயிரத்து 381 பேரின் ரத்தம், சளி பரிசோதனை ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 8 ஆயிரத்து 442 பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 81 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை, ஆயிரத்து 101 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 809 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இன்று ஒரே நாளில் 52 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 33 ஆண்கள், 19 பெண்கள் ஆவர்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (ஏப்ரல் 26) வரை 1,885 பேருக்கும், இன்று 52 பேருக்கும் என மொத்தம் 1,937 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. சிகிச்சை பலனின்றி நேற்று வரை 24 பேர் உயிரிழந்தனர். 809 நோயாளிகள் நல்ல நிலையில் உள்ளனர். மொத்தம் 1,312 ஆண்களும், 625 பெண்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளில் சென்னை மாவட்டத்தில் 47 பேரும், மதுரை மாவட்டத்தில் 4 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒருவரும் என 52 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கரோனா தொற்று உறுதியாகியுள்ள 37 மாவட்டங்களின் நிலவரம்:
- சென்னை மாவட்டம் 570
- கோயம்புத்தூர் மாவட்டம் 141
- திருப்பூர் மாவட்டம் 112
- திண்டுக்கல் மாவட்டம் 80
- மதுரை மாவட்டம் 79
- ஈரோடு மாவட்டம் 70
- திருநெல்வேலி மாவட்டம் 63
- நாமக்கல் மாவட்டம் 59
- செங்கல்பட்டு மாவட்டம் 58
- தஞ்சாவூர் மாவட்டம் 55
- திருவள்ளூர் மாவட்டம் 53
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் 51
- விழுப்புரம் மாவட்டம் 48
- நாகப்பட்டினம் மாவட்டம் 44
- தேனி மாவட்டம் 43
- கரூர் மாவட்டம் 42
- ராணிப்பேட்டை மாவட்டம் 39
- தென்காசி மாவட்டம் 38
- விருதுநகர் மாவட்டம் 32
- சேலம் மாவட்டம் 31
- திருவாரூர் மாவட்டம் 29
- தூத்துக்குடி மாவட்டம் 27
- கடலூர் மாவட்டம் 26
- வேலூர் மாவட்டம் 22
- காஞ்சிபுரம் மாவட்டம் 19
- திருப்பத்தூர் மாவட்டம் 18
- கன்னியாகுமரி மாவட்டம் 16
- திருவண்ணாமலை மாவட்டம் 15
- ராமநாதபுரம் மாவட்டம் 15
- சிவகங்கை மாவட்டம் 12
- நீலகிரி மாவட்டம் 9
- பெரம்பலூர் மாவட்டம் 7
- அரியலூர் மாவட்டம் 6
- கள்ளக்குறிச்சி மாவட்டம் 6
- புதுக்கோட்டை மாவட்டம் 1
- தருமபுரி மாவட்டம் 1
கரோனா சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த நோயாளிகள் 81 பேர் இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 14 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 பேரும், கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 26 பேரும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 பேரும், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 பேரும், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தலா இரண்டு பேரும், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.